Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் தொடரும் மர்மங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் அவசியம்: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 11:02 GMT, Apr 28, 2017 | Published: 11:02 GMT, Apr 28, 2017 |
0 Comments
1164
This post was written by : Risha

ஜெயலலிதா மரணம், கொடநாடு காவலாளி கொலை உள்ளிட்ட தமிழகத்தில் தொடரும் மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மத்திற்கு முடிவு கட்டப்படாத நிலையில், தற்போது அவர் ஓய்வெடுக்க செல்லும் கொடநாடு பங்களாவில் இடம்பெற்ற கொலை என்பற்றை சுட்டிக்காட்டி இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தமிழக விவசாயிகள் தொடர்பில் கருத்துரைத்த ஸ்டாலின், தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிராமணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை விட அதை இல்லை என தமிழக அரசு கூறுவதே மிகவும் கொடுமையான விடயமாகும்.

இந்நிலையில், தமிழக விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த பிரதமரை சந்திக்க அனுமதி கோரியுள்ள நிலையில், இவ்விடயத்தை பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg