Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 16:28 GMT, Apr 28, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Sivaguru Siva
_95828730_hi039198019-1

பிரித்தானிய வெஸ்ற் மினிஸ்டர் வைற் ஹோல் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சந்தேக நபரின் பெயர்விபரங்களை இன்று ஸ்கொட்லன்ட்யாட் காவற்துறை பகிரங்கப்படுத்தியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வெளிநாட்டில் பிறந்த பிரித்தானிய குடியுரிமை பெற்ற 27 வயதான காலித் முகமட் ஒமர் அலி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே பிரித்தானிய உள்ளக புலனாய்வு அமைப்பான  எம்.ஐ. 5 இன் கண்காணிப்பில் இருந்த காரணத்தால் அவரது நடமாட்டம் அவதானிக்கப்பட்டு  கைதுசெய்யப்பட்டதாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர்

_95825345_tuskeu

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான எதிர்கால உறவுகளை தீர்மானிக்கும் பிரெக்ஸிற்பேச்சுகளில் வணிக ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை இல்லையென ஐரோப்பிய பேரவையின் தலைவர் டொனால்ட் ரஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

நாளை பிரெசெல்சில் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டு இடம்பெறவுள்ளநிலையில் டொனால்ட் ரஸ்க்கின் இந்தக்கருத்து வந்துள்ளது.

ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான அதிகாரபூர்வமான பிரெக்ஸிற் பேச்சுகள் எதிர்வரும் யூன்மாதம் இடம்பெறவுள்ள பிரித்தானிய பொதுத் தேர்தலுக்குப்பின்னரே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

donald-trump.jpg.size.custom.crop.1086x724

வடகொரியாவுடன் மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அரசதலைவர் டொனாலட் ரம்ப் தெரிவித்துள்ளார்

வடகொரியாவுடனான பிரச்சனையை அமெரிக்கா பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க விரும்பினாலும் இது கடினமான முயற்சியாக மாறுமென தான் நினைப்பதாக குறிப்பிட்ட ரம்ப் வடகொரியா உலகிற்கு பெரும் சவாலாக இருப்பதால் மிகப்பெரிய மோதல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

வடகொரியா விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பெரும் முயற்சி செய்ததாக தான் நம்புவதாகவும் ரம் குறிப்பிட்டுள்ளார்.

zidane1

பிரான்சின் அரசதலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்றுவாக்களிப்பில்  இயன்றவரை அதிதீவிர வலதுசாரி வேட்பாளருக்கு வாக்குகள் கிட்டுவதை தவிர்க்க வேண்டுமென பிரெஞ்சுகாற்பந்து விளையாட்டுத்துறையின் முக்கிய பிரமுகரான ஸினடின் சிடான் கோரிக்கை விடுத்துள்ளார்.

1998 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலககிண்ண கால்பந்து போட்டியில் ஸினடின் சிடான் தலைமையிலான பிரெஞ்சு அணியே இறுதியாக உலகக்கிண்ணத்தை தட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

_95822906_mediaitem95822905

மத்திய லண்டன் மேரிலுபொன் பகுதியில் பொதுப்போக்குவரத்து பேருந்து ஒன்றில் கத்திக் குத்துக்காயங்களால் 48 வயதான ஆண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக லண்டனில் கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருவதும் இதனால் கடந்தவார இறுதியில் மூவர் பலியாகியும் உள்ளனர்.

இந்த நிலையில் 189 இலக்கு பேருந்தில் நேற்று நள்ளிரவுக்குபின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது  ஸ்கொட்லன்ட்யாட் காவற்துறை இந்தசம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg