Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவின் முன்னணி நீச்சல் வீராங்கனை சுசீ றோஜேர்ஸ் ஓய்வு

In விளையாட்டு
Updated: 06:51 GMT, May 4, 2017 | Published: 06:51 GMT, May 4, 2017 |
0 Comments
1194
This post was written by : Anojkiyan

பிரேஸிலில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்ற பிரித்தானிய நீச்சல் வீராங்கனை சுசீ றோஜேர்ஸ் ஓய்வுபெற்றுள்ளார்.

நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) அவர் ஓய்வு பெறபோவதாக அறிவித்தார்.

உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், பிரித்தானியாவை பிரதிநிதித்துவம் செய்து போட்டிகளில் பங்கேற்கக் கிட்டியமை பெருமை அளிப்பதாகத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக நீச்சல் போட்டிகளில் ஜொலித்துவந்த வந்த நீச்சல் வீராங்கனை சுசீ றோஜேர்ஸின் ஓய்வு இரசிகர்களை சற்று கவலையடையவைத்துள்ளது.

33 வயதான சுசீ றோஜேர்ஸ் 50 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கமும் 50 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg