Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதயங்க வீரதுங்க தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

In இலங்கை
Updated: 11:03 GMT, May 8, 2017 | Published: 11:03 GMT, May 8, 2017 |
0 Comments
1432
This post was written by : Varshini

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மிக் விமானக் கொள்வனவு விவகாரம் தொடர்பில் உதயங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு, இன்று (திங்கட்கிழமை) உயர்நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வங்கிக் கணக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் கால அவகாசம் வழங்குமாறு அரச தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதிவரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டதோடு, அன்றைய தினம் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg