Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியா கொலை விவகாரம்: சிறப்பு அமர்வில் விசாரணை

In இலங்கை
Updated: 06:13 GMT, May 10, 2017 | Published: 06:03 GMT, May 10, 2017 |
0 Comments
1539
This post was written by : Risha

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டுவந்த குறித்த படுகொலை வழக்கின் விசாரணைகள் மேலதிக நடவடிக்கைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை ‘ட்ரயல் அட் பார்’ தீர்ப்பாயம் முன்னிலையில் முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ள அதேவேளை, இவ்வழக்கை கொழும்பில் நடத்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்புக்காக இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பகிர்வு பத்திரம் ஒரு வாரத்துக்குள் முன்வைக்கப்படும் என்று சட்டமா அதிபர் சார்பில் அரச தரப்பு சட்டத்தரணியால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு மாணவி வித்தியா, கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேற்படி சம்பவம் தொடர்பில் 12 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg