Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியப் பிரதமருடன் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சந்திப்பு

In இலங்கை
Updated: 04:07 GMT, May 12, 2017 | Published: 02:13 GMT, May 12, 2017 |
0 Comments
1217
This post was written by : Ravivarman

இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற இராப்போசன விருந்தின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை இந்திய பிரதமர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது கடந்த காலங்களில் இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் தற்போதும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற உதவிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பாக இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை என்ற போதிலும் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதற்கிணங்க சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg