Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்வின்றித் தொடரும் சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை
Updated: 10:54 GMT, May 14, 2017 | Published: 09:54 GMT, May 14, 2017 |
0 Comments
1393
This post was written by : Ravivarman

நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வவுனியா சுகாதார தொண்டர்கள், தமது கோரிக்கைகளுக்கு இதுவரை சாதகமான பதிலேதும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களின் போராட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 11 நாட்களை எட்டியுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தரப்பினர் செவிசாய்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள சுகாதார தொண்டர்கள், தமக்கான தீர்வு வழங்கப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேற்றையதினம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg