Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜனிகாந்தின் அரசியல் பிரவேசம்: எச்சரிக்கிறார் சேரன்!

In இந்தியா
Updated: 09:09 GMT, May 17, 2017 | Published: 09:07 GMT, May 17, 2017 |
0 Comments
1980
This post was written by : Shailu

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், அரசியல்  பிரவேசம் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு இயக்குநரும் நடிகருமான சேரன் குறிப்பிட்டுள்ளார்.

“நான் அரசியலுக்கு வருவது குறித்து கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும்” என நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சூசகமான அறிவிப்பு ஒன்றை ரஜனிகாந்த் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த போதே சேரன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். ரஜனிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து சேரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

“வணக்கம் சார். உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும். மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் ஜாக்கிரதையாக இருங்கள். களவும் ஊழலும் இலஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா?

உங்களுக்கு பொய் பேசுவதற்கு வராது. அரசியலுக்கு வந்தால் கர்நாடகாவை எதிர்க்க வேண்டும், ஹிந்தி திணிப்பை ஆதரிக்கக்கூடாது, இலவசங்களை கொடுத்தே ஆகவேண்டும், மதுக்கடைகளை மூடக்கூடாது என ஏராளமான சவால்கள் காணப்படுகின்றன.

நீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களமிறங்குங்கள், கலந்து பேசுங்கள். பகுதி வாரியாக பிரச்சினைகளை தெரிந்துகொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg