Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள்

In இலங்கை
Updated: 07:17 GMT, May 18, 2017 | Published: 07:17 GMT, May 18, 2017 |
0 Comments
1398
This post was written by : Varshini

முள்ளிவாய்க்கால் நினைவேந்நலை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த வழிபாட்டில், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, கைது செய்யப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவர வேண்டும் என தேங்காய் உடைத்து உருக்கமாக வழிபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக நெய் விளக்கேற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கடந்த 88 நாட்களாக தொடர் கவனயீர்பபு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kili kandaswamy (6) kili kandaswamy (5) kili kandaswamy (2) kili kandaswamy (1) kili kandaswamy (8) kili kandaswamy (4) kili kandaswamy (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg