Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனது சொந்த லட்சியத்தை எட்டுவதை ஒருபோதும் தடுக்க முடியாது: ஷரபோவா

In டெனிஸ்
Updated: 07:59 GMT, May 18, 2017 | Published: 07:59 GMT, May 18, 2017 |
0 Comments
1378
This post was written by : Anojkiyan

தனது சொந்த லட்சியத்தை எட்டுவதை ஒருபோதும் தடுக்க முடியாது என ஊக்கமருந்து தடையிலிருந்து மீண்ட ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தெரிவித்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு ஷரபோவாவுக்கு மறுக்கப்பட்டுள்ளதன் பிண்ணனியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“எனக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளால் எனது சொந்த லட்சியத்தை எட்டுவதை ஒருபோதும் தடுக்க முடியாது. இதுபோல் பல பிரச்சினைகளை நான் எதிர்கொண்டு மீண்டு வந்து இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ரோம் டென்னிஸ் போட்டியிலிருந்து மூன்று முறை சம்பியனான ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, காயம் காரணமாக இரண்டாம் சுற்றிலேயே விலகியதன் மூலம் விம்பிள்டன் போட்டியில் தகுதி அடிப்படையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். ஆனால் அவர் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்புக்கு பிரான்ஸ் டென்னிஸ் சங்கம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி பாரிஸில் ஆரம்பமாகவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg