Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:40 GMT, May 19, 2017 | Published: 16:40 GMT, May 19, 2017 |
0 Comments
1169
This post was written by : Sivaguru Siva

விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ் மீதான பிடியாணையை மீளெடுக்க சுவிடன் முடிவுசெய்ததையடுத்து இது தனக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியென யூலியன் அசாஞ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த 7 வருடங்களான தான் தஞ்சம் அடைந்திருக்கும் பெரு தூதரகத்திலிருந்து அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார்  எனினும் தனக்குரிய நாடுகடத்தல் அச்சுறுத்தல் இன்னமும் முடிவுக்கு வரவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

des-policiers-sur-les-champs-elysees-a-paris-le-20-avril-2017_5866023

பரிஸ்நகரின் சாம்ஸ் எலிசே நகரில் கடந்தமாதம் 20 ஆந்திகதி இரவு தாக்குதலை நடத்திய ஆயுததாரிக்கு துப்பாக்கியை வழங்கிய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 23 வயதான நபர் இன்று நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்டார்.

காவற்துறையினர் மீது தாக்குதலை நடத்திய ஆயுததாரி உடனடியாகவே சுட்டுக்கொல்லபட்டிருந்தார்.

இந்ததாக்குதலில் ஒரு காவற்துறை உறுப்பினர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்திருந்தனர்

இதன்பின்னர் ஆயுததாரி பயன்படுத்திய ஆயுதத்தில் காணப்பட்ட மரபணுவை அடிப்படையாகக்கொண்டு மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

labourfuturenhs1905a

என்.எச்.எஸ் எனப்படும் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை அடுத்த ஆண்டு    ஜனவரி முதல் தனியார் மயப்படுத்தப்படப்போவதாக சமூகவலைத்தளங்களில் உலாவரும் பதாதைஅறித்தல் போலியானதென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் இந்த அறிவித்தலை நம்பவேண்டாமெனவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்

Bahubali-2-The-Conclusion-HD-Images-Pics-Wallpapers-Shooting-Stills

பாகுபலி 2 திரைப்படம் அது 21 நாட்களில் இந்திய நாணயத்தில் 1500 கோடி ரூபா வசூலைத்தாண்டி சாதனை படைத்துள்ளது.

ராஜமௌலியின் இயக்கத்தில்வெளியான இந்ததிரைப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாகுபலியின் இந்த சாதனைக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg