Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி அறவழி போராட்டம்

In இலங்கை
Updated: 10:47 GMT, May 21, 2017 | Published: 10:38 GMT, May 21, 2017 |
0 Comments
1447
This post was written by : Varshini
Tamil-women-hold-008-460x264

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தி தலைநகரில் அறவழிப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) இப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அரசுக்கு வலியுறுத்தவுள்ள இப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கிலுள்ள சிவில் அமைப்பினர், காணாமல்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என சகலரும் கலந்துகொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அருட்தந்தை சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg