Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனது அமைச்சுக்குள் ஞானசாரரால் நுழையமுடியாது – அமைச்சர் ஹரிஸ்

In இலங்கை
Updated: 09:10 GMT, May 22, 2017 | Published: 02:40 GMT, May 22, 2017 |
0 Comments
6286
This post was written by : Ravivarman

சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக அடாவடித்தனங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஞானசார தேரர் தனது அமைச்சிற்குள் காலடி வைத்தால் விளைவுகள் வேறுவிதமாகவே அமையும் என விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற பாராட்டுவிழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சர் மனோ கணேசன் போல் என்னால் பொறுமையுடன் நடந்து கொள்ள முடியாது. எனது அமைச்சிற்குள் ஞானசார தேரர் குழப்பும் எண்ணத்துடன் வந்தால் எனது நடவடிக்கைகள் வேறு பாணியில் இருக்கும்.

அண்மைக் காலங்களில் சிறுபான்மைச் சமூகங்கள் மீதான இவர்களின் நடவடிக்கைகள் மோசமானவையாக காணப்படுவதுடன் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமும் இருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸ்துறை கைகட்டி இனவாதிகளின் பின்னால் நிற்கின்றது.

அத்துடன் குருநாகல் பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பான இவர்களின் விசாரணைச் செயற்பாடுகள் இதுவரை ஆக்கபூர்வமாக இடம்பெற்றிருக்கவில்லை” என பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg