Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவாத தாக்குதல்கள் குறித்து அமைச்சரவையில் விசேட கவனம் செலுத்தப்படும்: கயந்த

In இலங்கை
Updated: 16:10 GMT, May 23, 2017 | Published: 16:10 GMT, May 23, 2017 |
0 Comments
2037
This post was written by : Ravivarman

இனவாதச் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பல்வேறு இடங்களிலும் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக அமைச்சரவையில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இவ்வாறான செயற்பாடுகளை எந்தவகையிலும் அரசாங்கம் அனுமதிப்பதில்லை எனவும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கயந்த இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளை அழைத்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும்போது, குறித்த அந்த பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொறுப்புக்கு கூற வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்ததாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg