Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்களை தண்டிப்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம்: பசுபதிப்பிள்ளை

In இலங்கை
Updated: 03:51 GMT, May 28, 2017 | Published: 03:51 GMT, May 28, 2017 |
0 Comments
1725
This post was written by : Ravivarman

அரசாங்கம் தொடர்ந்து தமிழர்களைத் தண்டிப்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டத்தினைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.

நேற்றையதினம் (சனிக்கிழமை) கிளிநொச்சி அக்கராயன்குளம் கெங்காதரன் குடியிருப்புப் பகுதியில் கரைச்சி பிரதேசசபையினால் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்துகொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்களை சிறு காரணங்கள்கூட இன்றி கைதுசெய்யக்கூடிய முறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டமானது எப்போது வேண்டுமானாலும் எமது மக்கள் மீது பிரயோகிக்கப்படலாம். இன்று தடுப்பிலிருக்கும் எமது அரசியல்கைதிகள் அனைவரும் இவ்வாறு காரணங்கள் இன்றிக் கைது செய்யப்பட்டவர்கள்தான் என்பதால் நாம் மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும்.

இன்று அரசாங்கம் எமது மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிட முனைகின்றது. இராணுவத்தினர் முழுமையாக அகற்றப்படாததால் பல பிரச்சினைகளுக்கு நாம் முகங்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்” என மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg