Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு காஷ்மீர் வன்முறையால் இயல்பு நிலை பாதிப்பு

In இந்தியா
Updated: 09:34 GMT, May 28, 2017 | Published: 09:34 GMT, May 28, 2017 |
0 Comments
1523
This post was written by : Shailu

ஜம்மு காஷ்மீரின் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், பிரிவினைவாதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த தீவிரவாத இயக்க தளபதியான  Sabzar Ahmad Bhat உட்பட 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக நேற்று பாதுகாப்பு படைகள் அறிவித்திருந்த நிலையில், மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரமழான் நோன்பு தினங்களில் வர்த்த நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வீதிகளும் வாகனப்போக்குவரத்து இன்மையால் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக  பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் 19 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், 50-இற்கும் மேற்பட்ட பகுதிகளில் வன்முறை இடம்பெற்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அவ் இயக்கத்தின் புதிய தளபதியாக சப்ஸார் அகமது பட் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதலில் சப்ஸார் அகமது பட் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg