Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மோர் இட்லி

In
Published: 11:08 GMT, Jun 12, 2017 |
0 Comments
1243
icon_com
This post was written by : Shailu
Thayir Idlis

தேவையான பொருட்கள்

இட்லி மா- தேவையான அளவு
மோர் – 2 கிளாஸ்
மோர் மிளகாய் வத்தல்- 10
சிவப்பு மிளகாய்- 5
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை

முதலில் இட்லியை தேவைக்கேற்ப அவித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவித்த இட்லிகளை சூடு ஆறியவுடன் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

வெந்தயம், சிவப்பு மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பக்கத்தில் மோர் மிளகாய் வத்தலை, தனியாக பொறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மோரை இரண்டாக பிரித்து, ஒரு பகுதி மோரில் மிக்சியில் அரைத்த வெந்தயம்,மிளகாய் பொடியை கலந்துவிட வேண்டும். மற்றொரு பகுதி மோரில் ஒரு கிளாஸ் நீர் சேர்த்து,அதில் வெட்டி வைத்த இட்லி துண்டுகளை அரை மணி ஊற வைக்க வேண்டும்.

பின்னர் இட்லி துண்டுகளை எடுத்து,அதன் மேல் ஏற்கனவே இருக்கும் வெந்தயம்,மிளகாய் பொடி கலந்து மோரை ஊற்ற வேண்டும் அதனுடன் பொறித்து வைத்திருக்கும் மோர் மிளகாயை நன்றாக நொறுக்கி அதன் மேல் தூவ வேண்டும். பின்னர் கொத்தமல்லி தழைகளை கொண்டு அலங்கரித்தால்.. தற்போது சுவையான மோர் இட்லி தயார்..!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg