Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

18 வயதை அடைந்துள்ள சகலருக்கும் வாக்களிக்கும் உரிமை: தேர்தல்கள் ஆணைக்குழு

In இலங்கை
Published: 09:22 GMT, Jul 1, 2017 |
0 Comments
1265
icon_com
This post was written by : Ravivarman
dsaasdd1

18 வயதை அடைந்துள்ள சகலருக்கும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களின் தேர்தல் அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பன அறிவிக்கப்படும் தினத்தன்று தினத்தன்று 18 வயதை அடைந்துள்ள சகலருடைய பெயர்களும் அடங்கும் வகையில் இடைக்கால பெயர்ப்பட்டியல் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்ட ஒழுங்குகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் இடம்பெற்றால் அதற்காக 2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளதால் கடந்த 2016 ஜூன் மாதம் முதல் இவ்வருடம் ஒக்டோபர் வரையில் 18 வயதை அடைந்துள்ள இளைஞர், யுவதிகள் வாக்களிக்கும் உரிமையை இழக்கின்றனர்.

எனவே இதற்கான உடனடித் தீர்வாகவே இடைக்கால பெயர்ப்பட்டியல் ஒன்றைத் தயாரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg