Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூயோர்க்கில் கடும் வெள்ளம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

In
Published: 04:46 GMT, Jul 3, 2017 |
0 Comments
1441
icon_com
This post was written by : Sylviya

நியூயோர்க்கில் உள்ள மாடிசன் கவுண்டியில் பெய்த அடை மழை காரணமாக பெருந்தெருக்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெய்த குறித்த அடை மழையால் 1000 க்கும் மேற்பட்டோருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று இரவு வேளையிலேயே மின்சாரம் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக கழிவுப் பொருட்கள் பாதைகளில் தேங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு நோக்கம் கருதி பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்வது சிறந்தது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg