Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில் உள்ளடக்கம்: தலதா அதுகோரல

In இலங்கை
Published: 17:30 GMT, Jul 3, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Ravivarman
download

இவ்வருடத்தில் இதுவரை 67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த வருடம் இவ்வாறு 61 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்படடதுடன்,
பணியகத்தின் முறைப்பாடுகளை விசாரணை செய்ய ஒத்துழைக்காமை, பணியகத்தில் பதிவு செய்யாமல் நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல், போலி ஆவணங்களை முன்வைத்தல், வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஊழியர்களை அனுப்பாமை போன்றவை இந்த தடைப்பட்டியலில் சேர்க்க காரணமாக அமைந்தன” என அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg