Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். பாதயாத்திரைக் குழுவினர் பொத்துவிலை சென்றடைந்தனர்

In இலங்கை
Published: 16:00 GMT, Jul 10, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Ravivarman
Pilgrims - 0988

கதிர்காமத்துக்கு வடமாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்தின் கரையோர நகரங்கள் ஊடாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இன்று (திங்கட்கிழமை) பொத்துவிலை சென்றடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி கோயிலிலிருந்து, கதிர்காமத் திருத்தலத்திற்கு பாதயாத்திரையை ஆரம்பித்த இவர்கள், புறப்பட்டு இன்றுடன் நாற்பத்தியோராவது நாளைப் பூர்த்தி செய்துள்ளனர்.

வேல்சாமி தலைமையில் நூற்று இருபது பக்தர்கள் இப்பாதயாத்திரைக் குழுவில் கதிர்காமம் செல்கின்றனர். இவர்கள் எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி உகந்தை மலைக் கோயிலை சென்றடைந்து, அங்கிருந்து காட்டு வழியூடாகப் பயணித்து, எதிர்வரும் இருபத்து மூன்றாம் திகதி கதிர்காமத் திருத்தலத்தின் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளவுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினால் நாளைய தினம் கதிர்காமத் திருத்தலத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பொத்துவில் நகரில் தாகசாந்தி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg