Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் நீதித்துறை குறித்து ஐ.நா. பிரதிநிதிகள் கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 02:35 GMT, Jul 13, 2017 | Published: 02:35 GMT, Jul 13, 2017 |
0 Comments
1338
This post was written by : Varshini

வவுனியாவிற்கு விஜயம் செய்த மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் உள்ளிட்ட குழுவினர், இலங்கையின் தற்கால நீதிமன்ற சூழ்நிலைகள் மற்றும் சட்டம் தொடர்பான விடங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பானது, வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட நீதிபதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, வவுனியாவில் கடந்த 140 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனோரின் உறவினர்களை இக்குழுவினர் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில், காணாமல் போனோரின் உறவினர்கள் இதுகுறித்து அதிருப்தி அடைந்ததோடு, தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பித்த ஐ.நா. பிரதிநிதிகள், நாளை வரை  இலங்கையில் தங்கியிருப்பர். இக்காலப்பகுதியில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, அவை குறித்து அறிக்கையொன்றையும் தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg