Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயிக்க நான்குபேர் கொண்ட சிறப்புக்குழு

In கிாிக்கட்
Updated: 04:38 GMT, Jul 16, 2017 | Published: 04:34 GMT, Jul 16, 2017 |
0 Comments
1355
This post was written by : Anojkiyan

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயிக்க நான்குபேர் கொண்ட சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) பொறுப்பு தலைவர் சி.கே. கன்னா, ராகுல் ஜோரி, நிர்வாகக் குழுவில் இடம்பிடித்துள்ள டயானா எடுல்ஜி மற்றும் பி.சி.சி.ஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக செயல்படும்போது வருடத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ண தொடர் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg