Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம்: கோவிந்தன் கருணாகரம்

In
Updated: 09:50 GMT, Jul 17, 2017 | Published: 09:03 GMT, Jul 17, 2017 |
0 Comments
1431
This post was written by : Ravivarman
SAM_8469

தமிழீழ விடுதலைப் புலிகளின் துரோகிகள் பட்டியலில் இருந்த குமார் பொன்னம்பலத்தை நாமே காப்பாற்றினோம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 வது வீர மக்கள் தினம் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்றையதினம் (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புலிகளின் துரோகிகள் பட்டியலில் குமார் பொன்னம்பலம் இருந்தார் அதற்கு சாட்சி நான். அவரைப் புலிகளிடம் இருந்து நாங்கள் காப்பற்றி இருக்காவிடில் அவர் துரோகிகள் பட்டியலில் தொடர்ந்தும் இருந்திருப்பார்.

அதன்பின்னரே அவருக்கு மாமனிதர் பட்டமும் வழங்கப்பட்டது. இந்த வரலாற்றினைத் தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று முகநூல்கள் மற்றும் இணையத்தளங்களில் போராட்டம் குறித்து முழுமையாக அறியாத பலர் எழுதுகின்றனர். ஒரு சில பத்திரிகையாளர்களைத் தவிர ஏனைய பத்திரிகைகள் தவறான விளக்கங்களுடனேயே இருக்கின்றனர்” என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)