Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பச்சிலைப்பள்ளியில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

In இலங்கை
Published: 14:55 GMT, Jul 17, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Ravivarman

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது.

இணைத் தலைவர்களான மாவை சேனாதிராஜா, இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிகளைப் பெற்று கொள்ளல் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உட்பட மீள்குடியேற்றம், கண்ணி வெடியகற்றல், அனர்த்த முகாமைத்துவம் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg