Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்து ஆராய இலங்கை வருகிறார் சவுதி இளவரசர்

In இலங்கை
Updated: 03:59 GMT, Jul 21, 2017 | Published: 03:59 GMT, Jul 21, 2017 |
0 Comments
1276
icon_com
This post was written by : Risha
Muqrin bin Abdul-Aziz Al Saud

இலங்கையில் முதலீடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தொடர்பாக ஆராயும் பொருட்டு சவுதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும் இளவரசருமான  முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.

இலங்கைக்கு வருகைதரும் இளவரசர் அல் சவூத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டுள்ளார்.

இளவரசரின் இவ்விஜயத்தின் போது கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg