Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்முறை அரசியல் செய்பவர்களின் செயற்பாடே நீதிபதி மீதான தாக்குதல்: மனோ கணேசன்

In இலங்கை
Published: 14:36 GMT, Jul 23, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Ravivarman
Mano-Ganesan-01-720x450

வடக்கிலே வன்முறைகளை வைத்து அரசியல் செய்யும் சிலரின் செயற்பாடாகவே மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலைக் கருதுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கிலே வன்முறைச் செயற்பாடுகள் இல்லை ஓய்ந்து விட்டன என்னும் நிலை காணப்பட்டபோதும், இன்னும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று சொல்லி அரசியல் செய்ய விரும்பும் சிலரின் செயற்பாடாக இச்சம்பவத்தினைக் கருதுகின்றேன்.

தென்னிலங்கை பேரினவாதிகளுக்கு, இச்சம்பவம் வெறுமனே மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஒரு சூழலைத் தந்திருக்கும் என நினைக்கின்றேன்.

நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் கடுமையான, காத்திரமான பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். மிகவும் சர்ச்சைக்குரிய வழக்குகளை நெறிப்படுத்தி வருகின்றதுடன், அவற்றினைக் கண்காணித்தும் வருகின்றார்.

இந்நிலையில் அவர் மீதான தாக்குதல் வடக்கிலே சட்டம் ஒழுங்குக்கு விடப்பட்டுள்ள சவாலாகக் கருதுவதுடன், இது தொடர்பாக பொலிஸ்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg