Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். துப்பாக்கிச்சூடு நல்லாட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது: ஒருங்கிணைப்புக் குழுக்கள்

In இலங்கை
Published: 07:12 GMT, Jul 25, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Risha

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாகவுள்ள நீதிமுறைமையை வலுப்படுத்தப்பட வேண்டிய இக்காலக்கட்டத்தில், நீதிபதியே தாக்கப்படுவதானது இலங்கையின் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கோரி வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும், கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஏ9 வீதியிலும் முன்னெடுக்கப்பட்டது, வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் வர்த்தகர்கள், பொதுமக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். கிழக்கில் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதிக்கான கடிதம் ஒன்றும் அரசாங்க அதிபரிடம்  கையளிக்கப்பட்டது.

இந்த சம்பவமானது நீதித்துறைக்கு மட்டுமின்றி நீதியை நிலைநாட்ட விளையும் அனைவருக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் உரிய நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு பாதுகாப்பும், ஜனநாயகமும் உறுதிபடுத்தப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

IMG_1492

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg