Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது!

In ஐரோப்பா
Published: 09:22 GMT, Jul 28, 2017 |
0 Comments
1525
icon_com
This post was written by : Elakkiya

பிரான்ஸின் தென்கிழக்கு Bormes-les-Mimosas பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக குறித்த பகுதியில் 1600 ஹெட்டேயர் பரப்பளவு எரிந்து நாசமாகியது. காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக 530 தீயணைப்பு வீர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தீயணைப்புப் படைப்பிரிவின் அதிகாரி கிறிஸ்டியன் ரோவியர் “Bormes-les-Mimosas பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை எனினும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் சில பகுதிகளில் காற்று வீசுவதால் மீண்டும் தீ ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே தீயணைப்பு வீரர்கள் உறுதிப்படுத்தும்வரை குறித்த பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதிக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பகுதிகளுக்கு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுப்பது என்பது தமக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் தடுக்க முற்படுகின்றபோது பொதுமக்களுக்கும் தமக்கும் இடையில் பதற்றம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். Bormes-les-Mimosas பகுதியிலிருந்து சுமார் 13 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg