Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளுக்கு ரஷ்யா பதிலடி

In உலகம்
Published: 10:12 GMT, Jul 28, 2017 |
0 Comments
2251
This post was written by : Elakkiya

ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை குறைக்கவும் சொத்துக்களை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு தடை விதித்தும் ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா மீதான அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள மேற்படி உத்தரவின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதிக்குள் ரஷ்யாவிலுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் எண்ணிக்கையை 455ற்கு குறைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அமெரிக்க இராஜதந்திரிகளால் பயன்படுத்தப்படும் பண்டகசாலை மற்றும் விடுமுறைச் சொத்துக்களை தாம் கையகப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு கிரைமியாவை இணைத்துக் கொண்ட ரஷ்யாவை மேலும் தண்டிக்கும் வகையில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg