Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக ஷாகித் கஹான் அப்பாஸி தெரிவு

In
Published: 04:01 GMT, Jul 30, 2017 |
0 Comments
1690
icon_com
This post was written by : Anojkiyan

பனாமா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக ஷாகித் கஹான் அப்பாஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 45 நாட்கள் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்று ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

மேலும், ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், புதிய பிரதமராக நவாஷ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, பிரதமராக பதவியேற்க முடியும் என்பதால், இடைக்காலப் பிரதமராக அமைச்சர் ஷாகித் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஷாகித் கஹாகான் அப்பாஸி, நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான அமைச்சரவையில் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் ஆவார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg