Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

TNPL போட்டிகளால் இளையவர்களுக்கு நல்ல வாய்ப்பு: பிரெட் லீ

In கிாிக்கட்
Published: 05:54 GMT, Jul 31, 2017 |
0 Comments
1504
icon_com
This post was written by : Varothayan
bret-lee

தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரால் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

திருச்சி வாரியர்ஸ் அணிக்கு ஆதரவாக பிரெட் லீ ரசிகர்களுடன் அமர்ந்து போட்டியை ரசிக்க உள்ளார். இந்நிலையில் நேற்று, திருச்சி ஜோன் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் போட்டியைப் பார்வையிட்ட லீ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியால் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல தளம் கிடைத்திருக்கிறது. துடுப்பாட்ட வீரர்கள் 20 ஓவர் ஆட்டங்களை எதிர்கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்திடம் தோற்றது துரதிருஷ்டவசமானது. ஜூலான் கோஸ்வாமியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது” என்றார்.

இரண்டாவது தடவையாக நிகழும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் போட்டிகள் இடம்பெறாத திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகன்ற திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg