Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் போராட்டக் களத்தில்!

In இந்தியா
Published: 07:39 GMT, Aug 12, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Surenth
Sonia Gandhi

பாரதிய ஜனதா கட்சியையும் மத்திய அரசின் செயற்பாடுகளையும் கண்டித்து குஜராத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி குஜராத்தில் மாநிலம் தழுவிய ரீதியில் போராட்டம் நடைபெறும் என்று கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போராட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைப்பார்கள் என  கட்சி வட்டார செய்திகள் குறிப்பிடுகின்றன.

மேலும், இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள ஏனைய எதிர்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் இதற்கு ‘சத்யாகிரக போராட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்வரும் 27ஆம் திகதி லல்லு பிரசாத் யாதவ் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg