Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூறைக் காற்றினால் இருளில் முழ்கிய ஆயிரக்கணக்கான வீடுகள்!

In கனடா
Updated: 09:49 GMT, Aug 24, 2017 | Published: 09:49 GMT, Aug 24, 2017 |
0 Comments
1219
This post was written by : Anojkiyan

மொன்றியல் உள்ளிட்ட கியூபெக்கின் தென்மேற்கு பிராந்தியங்களை தாக்கிய வலுவான சூறைக் காற்றினால் ஆயிரக்கணக்கான வீடுகள் மின் வினியோகத்தினை இழந்து இருளில் முழ்கியுள்ளன.

இந்த சூறைக்காற்றினால் மொன்றியலில் மட்டும் சுமார் 1,15,000 மின் தடை முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 63,000 வீடுகளுக்கான மின்வினியோகம் தடைப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மொன்றியல் நகருக்கு வெளியே மொன்ரறேஜி பகுதியில் 29,000 வீடுகளும், லோறன்சன்ஸ் பகுதியில் 14,000 வீடுகளும், லவால் பகுதியில் சுமார் 5,000 வீடுகளும் மின் வினியோகத்தினை இழந்ததாக கூறப்படுகிறது.

எனினும், திருத்த வேலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மொன்றில் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் தற்போது படிப்படியாக வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg