Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியாவுக்கு எதிரான போரில் ஜேர்மனி இணையாது: மெர்க்கல்

In ஐரோப்பா
Updated: 10:01 GMT, Aug 24, 2017 | Published: 10:00 GMT, Aug 24, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Elakkiya
c0c78dcd-7f46-4b3f-a81d-fbf42d04a6e7

வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் குறித்த போரில் ஜேர்மனி தானாக முன்வந்து அமெரிக்காவுடன் இணையாது என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இது குறித்து கருத்து தெரிவித்த மெர்க்கல், வடகொரியாவுடனான இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைத்து இராஜதந்திர வழிமுறைகளும் பயன்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீனா, ஜப்பான், மற்றும் தென்கொரியா உள்ளிட்ட வடகொரிய அயல் நாடுகள் பியோங்யாங்குடன் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதற்கு  ஆர்வமாக இருக்க வேண்டும் என்றும் அந்த இலக்கை அடைவதற்கு கூடுதலாக பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது முற்றிலும் தவறானது என்றும் மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய நிலப்பரப்பை இலக்காக கொண்டு கடந்த ஜூலை மாதம் வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது.

அதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வொஷிங்டன் மற்றும் பியோங்யாங் இடையிலான இராணுவ தாக்குதல் அச்சுறுத்தல்கள் நெருக்கடியை மேலும் மோசமாக்கியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg