Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதாரக்கொள்கை வெளியீடு!

In இலங்கை
Published: 13:23 GMT, Sep 4, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Ravivarman
cv

நல்லாட்சி அரசாங்கத்தினால் எதிர்வரும் 8 வருட காலத்திற்காக வகுக்கப்பட்ட பொருளாதாரக்கொள்கை இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது.

மேற்படி நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமிசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து இன்றுடன் 2 வருடகாலம் பூர்த்தியாகின்றது.

பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து 2025ஆம் ஆண்டளவில் எத்தகைய இலக்கை நோக்கி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், அதற்கான தொலைநோக்கு என்ன என்பதை உலகத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்தும் வகையில் 2025 தூரநோக்கு திட்டம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg