Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாதாரண வீட்டையும் செலவின்றி அழகாக மாற்றுவது எப்படி?

In
Published: 08:55 GMT, Sep 5, 2017 |
0 Comments
1529
This post was written by : Kemasiya
fri85rtiktm

வீட்டை அழகாகக் கட்டுவதைக் காட்டிலும் கட்டிய வீட்டை அலங்கரிக்கப்பது அவசியம். அப்போதுதான் முழுமையான அழகு வீட்டுக்குக் கிடைக்கும். வீட்டு அலங்காரம் என்றதும் செலவு அதிகம் ஆகும் என நினைக்க வேண்டாம். புதுமையான சிந்தனைகள் இருந்தாலே போதுமானது. வீட்டைக் கண்ணைக் கவரும் வகையில் மாற்றலாம்.

பூச்சாடிகளுக்கு வீட்டு அலங்காரத்தில் முக்கியப் பங்குண்டு. பூச்சாடிகளில் பிளாஸ்டிக் பூக்களை இட்டு அழகாக வைக்கலாம். வீட்டின் வரவேற்பறையில், புத்தக மேசையில் வைக்கலாம். கண்ணாடி சாடிகளில் தண்ணீர் நிரப்பி நிஜப் பூக்களையும் வைக்கலாம். அப்படி வைக்கும்போது பூக்களின் மீது சிறிது தண்ணீர்த் தெளித்து வைத்தால் பார்வைக்குக் குளிர்ச்சியாக இருக்கும். வீட்டுக்கு அழகையும் தரும். வீட்டுக்குள்ளேயே வளரும் குரோட்டன் வகை தளிர்களையும் வளர்க்கலாம். தாவரப் பச்சை கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்மையை தரும்.

வீட்டின் வரவேற்பறையில் இனிய நினைவூட்டும் உங்கள் குடும்பப் புகைப்படங்களை மாட்டி வைக்கலாம். புகைப்படங்களை வைப்பதற்கான பலவிதமான போட்டோ ப்ரேம்கள் இப்போது கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி மாட்டலாம். உங்கள் தாத்தா, பாட்டியின் புகைப்படங்களை அழகான ப்ரேம்களில் இட்டு மாட்டலாம். இல்லை எனில் அழகான ஓவியங்களை உங்கள் வீட்டின் வண்ணத்திற்கேற்பத் தேர்வுசெய்து மாட்டலாம்.

வீட்டின் வரவேற்பறையில் உள்ள சோபாக்களில் அழகான வண்ணங்களில் குஷன்களை இடலாம். இது வீட்டை ஆடம்பர, அழகான இல்லமாக காட்டும். படுக்கையறையையும் மெத்தைகள் மீதும் அழகான குஷன்களை ஆங்காங்கு வைத்து அலங்கரிக்கலாம்.

முக்கியமான மற்றொரு விஷயம் திரைச்சீலைகள். ஜன்னல்கள், அறையின் வாசல்களுக்குப் பொருத்தமான திரைச் சீலைகளைத் தேர்வுசெய்தாலேயே வீட்டுக்குப் பாதி அழகு வந்துவிடும். தரைக்கு அழகான விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

அழகான வீட்டு முகப்பு

நம் வீட்டின் தலை வாசல் தான் மிக முக்கியமானது. இந்த வீட்டு முகப்பு அருமையாக இருந்தால் தான் அதன் வழியாக பொஸிட்டிவ் எனர்ஜியும் உள்ளே வர முடியும். பார்த்த உடனே அது கவரும் வகையில் சுத்தமாக இருக்க வேண்டும். பழைய தட்டுமுட்டுச் சாமான்கள், உடைந்த பொருள்கள் எல்லாம் இங்கே தேங்கிக் கிடக்கக் கூடாது. செடிகள் ஏதும் அங்கு வைத்திருந்தாலும் அவற்றை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

சுத்தமான அறைகள்

நம் வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையையும் எப்போதுமே சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். சிறிய அறையாக இருந்தாலும் அதை பளிச்சென்று வைத்துக் கொண்டால் நம் மனமும் அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கும். குப்பை கூளமாகக் கிடந்தால் அங்கு நேர்மறையுணர்வை எப்படிக் கிடைக்கும்? மண்டை காய்வதுதான் மிச்சமாக இருக்கும்.

 மரத் தளபாடங்கள்

நாம் கஷ்டப்பட்டு விலை கொடுத்து வாங்கிய தளபாடங்களை நம் வீட்டில் அதன் இடங்களில் சரியாக வைத்தால் தான் வீடு அழகாக இருக்கும். நமக்கும் நேர்மறையுணர்வை கிடைக்கும். கண்ட கண்ட இடங்களில் குண்டக்க மண்டக்கவாக  மரச் சாமான்களைப் போட்டு வைத்தால் நமக்கே கடுப்பாக இருக்கும். அவற்றில் நம் கால்கள் தெரியாமல் பட்டு இடறி விழவும் நேரிடலாம்.

வீடு வேறுவேலை வேறு

இப்போதெல்லாம் நிறைய பேர் தங்கள் வீட்டிலேயே அலுவலக வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வேலைக்கென்று தனியாக ஒரு இடத்தை வீட்டில் செட் செய்து கொள்வதுதான் நல்லது. அதைவிட்டு, தூங்கி ஓய்வெடுக்க வேண்டிய அறைகளைத் தங்கள் வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது. அப்படி இரண்டும் ஒன்றாக இருந்தால், ஒன்று வேலை செய்து கொண்டே இருப்பீர்கள்… அல்லது தூங்கிக் கொண்டே இருப்பீர்கள்!

பழுது நீக்குதல்

நம்மில் பெரும்பாலான வீடுகளில் நாற்காலிகள் ஸ்க்ரூ இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் அல்லது பாத்ரூம் குழாய்களில் வாசர்கள் பழுதாகி நீர் கசிந்து கொண்டிருக்கும். எந்த சிறிய பழுதையும் எவ்வளவு விரைவாக சரி செய்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு நேர்மறையுணர்வை கிடைக்கும் என்பது உறுதி.

முகக் கண்ணாடிகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நம் முகத்தைப் பார்க்கும் முகக் கண்ணாடிகளை சரியான இடத்தில், சரியான உயரத்தில், சரியான வெளிச்சத்தில் இருக்குமாறு சுவர்களில் தொங்க விடுங்கள். அப்படி நேர்மறையுணர்வை முகத்தில் நிச்சயம் பிரதிபலிக்கும்.

செடிகள், பூக்கள், பழங்கள்

தோட்டங்களில் இருப்பதைப் போல் நம் வீடுகளுக்குள்ளும் ஆங்காங்கே செடிகளையும், பூக்களையும், பழங்களையும் கண்களில் படுமாறு அமைக்க வேண்டும். நேர்மறையுணர்வை பிய்த்துக் கொள்ளும். ஒரு கிண்ணம் நிறைய பழங்களை படுக்கையறையில் வைத்தால் நல்ல ‘மூட்’ வருவதற்கு உதவும்.

நீர் செய்யும் மாயம்

குறைந்த பட்சம் ஒரு வாளியில் தண்ணீரைக் கொண்டு வந்து அறையின் ஓரத்தில் வைத்தால் அந்த அறையில் ஈரப்பதம் அதிகரித்து குளிர்ச்சியோடு இருக்கும். நமக்குள்ளும் ஒரு நேர்மறையுணர்வை கிடைக்கும். கொஞ்சம் வசதி இருந்தால் வோட்டர் ஃபவுண்டெயின் வைக்கலாம்.

வண்ணமயமான அறைகள்

நம் வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையையும் மிகவும் கலர்ஃபுல்லாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு தன்மை இருக்கும். அதற்கேற்றவாறு, நமக்கும் பிடித்தவாறு ஒவ்வொரு அறைக்கும் பெயிண்ட் அடித்துக் கொண்டால், அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் நேர்மறையுணர்வு பொங்கி வழியும்.

உருண்டை முனைகள்

மேசை, கதிரை, கட்டில் என்று நம் வீட்டிலுள்ள எந்தப் பொருளின் அனைத்துப் பக்கங்களும், முனைகளும் கூர்மையாக இருக்கக் கூடாது. அவை எந்த நேரத்திலும் நம்மைப் பதம் பார்த்துவிடும் என்பதால், அவை எதிர்மறையான உணர்வு பிரதிபலிப்பவை ஆகும். அவை உருண்டையாக, கூர்மையின்றி இருந்தால் நேர்மறையுணர்வை கொடுக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg