Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கென்யாவில் மறு தேர்தலை புறக்கணிக்கிறார் ரைலா ஒடின்கா

In உலகம்
Updated: 12:31 GMT, Sep 5, 2017 | Published: 12:18 GMT, Sep 5, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Suganthini
kenya

கென்யாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான மறு தேர்தல், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்தலில் தான் பங்கேற்க மாட்டார் என கென்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடின்கா தெரிவித்துள்ளார்.

கென்யாவில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில், உஹுரு கென்யாட்டா அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ரைலா ஒடின்கா தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறி நீதிமன்றத்தில் ரைலா ஒடின்கா வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அரசியலமைப்பை தேர்தல்கள் ஆணையகம் பின்பற்றவில்லை எனக் கூறி, மறு தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg