Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு தலைவர் பதவிக்கு அரவிந்த தெரிவு!

In கிாிக்கட்
Published: 03:59 GMT, Sep 8, 2017 |
0 Comments
3052
icon_com
This post was written by : Ravivarman
zas

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி பதவியிலிருந்த சனத் ஜயசூரிய பொறுப்பிலிருந்து கடந்த 06 ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார். இதன் பின்னரே வெற்றிடமாகவுள்ள பதவிக்கு, அரவிந்த டி சில்வா எதிர்வரும் 3 மாத காலத்துக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் இலங்கை அணியின் வீரர் ரொஷான் மஹானாமவும் இப்பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்னரும் தெரிவுக் குழுவின் தலைமைப் பதவியை அரவிந்த டி சில்வா வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg