Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பதவி விலகுவாரா `பாத்` பல்கலைக்கழக முதல்வர்

In
Updated: 11:38 GMT, Sep 8, 2017 | Published: 11:03 GMT, Sep 8, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : elayathambi
Dame-Glynis-Breakwell-OK

பிரித்தானியாவில் முதல் பத்துப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பாத் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

பல்கலைக்கழக துணை வேந்தராகப் பணியாற்றும் டேன் கிளினிஸ் ப்ரேக்வெல் அம்மையாருக்கு வழக்கப்படும் அது கூடிய வருமானமும் வசதிகளும் தற்போது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளன. ஆண்டொன்றுக்கு 450,000 பவுண்சை சம்பளம் இவருக்கு வழங்கப்படுகிறது. இதைத் தவிர அவருக்கு பல்கலைக்கழகம் வழங்கிவரும் கொடுப்பனவுகளில் ஒன்றான சலவை மற்றும் வீட்டுத் துப்பரவு ஆகியன உள்ளிட்ட செலவினமாக 18,000 பவுன்ஸ் கடந்த ஆண்டு வழக்கப்பட்டிருக்கிறது.

முதல்வருக்கு இலவசமான வதிவிடம் ஒன்றையும் பாத் பல்கலைக்கழகம் அளித்துள்ளது. 1.6 மில்லியன் பெறுமதியான இந்த வாசஸ்தலம் அவருக்கு வாடகை இன்றிக் கையளிக்கப்பட்டிருப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. வாடகையற்ற வீடு மாத்திரமன்றி அதற்கான மின்சாரம், எரிவாயு, மாதாந்த வரி என உள்ளிட்ட அவருக்கான செலவினங்கள் அனைத்தையும் பல்கலைக்கழகத்திடம் இருந்தே அவர் பெற்றுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் ஏனைய பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கும் இத்தகைய கொடுப்பனவிற்கும் இடையே உள்ள மிகப்பெரும் இடைவெளி விமரசனங்களைத் தோற்றுவித்துள்ளது. கற்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் கல்விக்காக ஆண்டொன்றுக்கு 9,250 பவுண்ஸ் கட்டணம் தரும் நிலையில் இத்தகைய அளவுக்கு மீறிய கொடுப்பனவுகள் பலத்த கேள்விக்குள்ளாகி உள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg