Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

திட்டமிட்டப்படி அ.தி. மு.கவின் பொதுக்குழு நடைபெறும்: ஜெயக்குமார்

In இந்தியா
Published: 06:49 GMT, Sep 9, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Vithushagan
201709091149327570_Minister-Jayakumar-speech-General-Council-held-on-12_SECVPF

அ.தி. மு.கவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கும் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”அ.தி. மு.கவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி 12 ஆம் திகதி நடைபெறும், இதில் அனைவரும் கலந்து கொள்வார்கள். கட்சி விதிப்படி 5 இல் ஒரு பகுதி உறுப்பினர்களின் ஆதரவுடன் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

ஜக்கையன் போல தினகரன் அணியில் உள்ள மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் அணிக்கு வருகிறார்கள். என் கேள்விக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் என்னை தரமின்றி விமர்சனம் செய்கிறார்கள்.

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளது பொதுவான கருத்து” என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.35 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவருவெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடை பெறவுள்ளது.

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு தடை கோரி தினகரன் அணி சட்டமன்ற உறுப்பினர்  வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். குறித்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி  விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg