Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்தவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

In இலங்கை
Published: 15:01 GMT, Sep 12, 2017 |
0 Comments
1352
icon_com
This post was written by : Surenth
Child Abuse

12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்தவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த குற்றத்திற்காக 53 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.

புதுக்குடியிருப்பு 02ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் கடந்த 09.09.2012ஆம் ஆண்டு குறித்த குற்றவாளியின் மனைவியின் சகோதரியின் மகளின் மகளை பாலியல் வன்புணர்வு புரிந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து குறித்த நபரை கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர், வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்ததுடன் ஆறு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 29.05.2017 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப் பத்திரம் வவுனியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

சாட்சியங்களின் சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டு பின்னர் தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் எதிரிக்கெதிரான குற்றச்சாட்டிற்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா இரண்டு இலட்சம் நஷ்டஈடும் செலுத்துமாறும் அதைச் செலுத்தத் தவறின் இரண்டு வருட கடூழிய சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டப்பணமாக ரூபா பத்தாயிரத்தையும் செலுத்துமாறும் அதைச் செலுத்தத் தவறின் ஒரு மாதம் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனத் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg