Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

திருமணம் பற்றி கேட்க வேண்டாம்: ஸ்ரேயா ஆவேசம்!

In சினிமா
Published: 04:46 GMT, Sep 14, 2017 |
0 Comments
1266
icon_com
This post was written by : Ravivarman
Shreya

முன்னணி நாயகியாக இருந்த ஸ்ரேயா, 30 வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று கேட்டதற்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

சென்னையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க வந்த ஸ்ரேயாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கோபமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த கேள்வியை 50 வயதை கடந்த கதாநாயகர்களிடம் போய் கேட்பீர்களா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி கேட்பது பைத்தியகாரத்தனம்.

அதுபோல் திருமணத்துக்கு பின் பெண்களிடம் அழகும், கவர்ச்சியும் குறைந்துவிடும் என்று சொல்வது தவறானது. பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் நடிப்பு திறமை பாதிக்கப்படாது.

அவர்களுடைய நடிப்பு பயணத்தையும் அது எந்தவிதத்திலும் பாதிக்காது. ஒரு நடிகையிடம் கேள்வி கேட்பவர்கள், 60 வயதை கடந்து 20 வயது நாயகிகளுடன் ‘டூயட்’ பாடும் நடிகர்களைப் பார்த்து ஏன் எதுவும் கேட்பதில்லை’ என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)