Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் விமான தாக்குதலில் 22 பொதுமக்கள் உயிரிழப்பு

In
Updated: 07:31 GMT, Sep 14, 2017 | Published: 07:31 GMT, Sep 14, 2017 |
0 Comments
1695
icon_com
This post was written by : Elakkiya
527c2406-0cbd-4729-adda-d2109b723216

சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்ட சமீபத்தய விமான தாக்குதல்களில் பெண்கள், சிறுவர்கள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய ஊடகம்  தகவல் வெளியிட்டுள்ளது.

ரக்கா மற்றும் டெய்ர் அல்-சவ்ர் நகரங்களில் நேற்று (புதன்கிழமை) அமெரிக்க விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களிலேயே மேற்படி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சனா தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்க போர் விமானங்கள் பொதுமக்களின் இடங்களை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாகவும் இதன்போது பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இலக்கு வைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg