Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரூபெல் ஹொசைன் தென் ஆபிரிக்கா செல்வதற்கு குடியேற்ற அனுமதி மறுப்பு

In கிாிக்கட்
Updated: 08:27 GMT, Sep 19, 2017 | Published: 08:27 GMT, Sep 19, 2017 |
0 Comments
1873
icon_com
This post was written by : Elakkiya
rhafp2

தென் ஆபிரிக்க தொடருக்கான பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ரூபல் ஹொசைன் சக வீரர்களுடன் தென் ஆபிரிக்கா செல்லவில்லை என்று கூறப்படுகின்றது. அவருடைய போர்டிங் பாஸ் (boarding pass) விமான நிறுவனத்தினால் மறுக்கப்பட்ட நிலையில் அணியின் சக வீரர்களுடன் ரூபல் ஹொசைன் தென் ஆபிரிக்கா செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பிரகாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றுநாள் பயிற்சி ஆட்டத்தில் ரூபல் ஹொசைன் பங்கேற்பது சந்தேகம் என்றே கூறப்படுகின்றது.

தென்ஆபிரிக்க குடிவரவு புதிய சட்டத்தின் பிரகாரம் செல்லுபடியாகும் விசாவினை வைத்திருந்தாலும் விமானத்தில் யார் செல்ல முடியும் என்ற உத்தரவாதத்தினை தென்ஆபிரிக்க குடிவரவு அதிகாரிகள் விமான நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு தென் ஆபிரிக்க குடிவரவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் ரூபல் ஹொசைனின் பெயர் இடம்பெறவில்லை என்ற காரணத்தினாலே அவருடைய போர்டிங் பாஸ் விமான நிறுவனத்தினால் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகாணும் வகையில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை அதிகாரிகள் தென் ஆபிரிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg