Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தியது சிறந்த அனுபவம் என்கிறார் பி.வி. சிந்து

In விளையாட்டு
Updated: 09:27 GMT, Sep 19, 2017 | Published: 09:21 GMT, Sep 19, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Elakkiya
f6f9c691c80705cd2f354c0524ca9626

கொரிய ஓபன் பட்மின்டனில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவை வீழ்த்தியது சிறந்த அனுபவம் என இந்திய வீராங்கனையான பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற கொரிய ஓபன் பட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொசோமி  ஒக்குஹாராவை எதிர்கொண்ட பி.வி.சிந்து 22-20,11-21 மற்றும் 21-18 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

இந்த வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பி.வி. சிந்து, ‘ இந்த போட்டியை உலக சம்பியன்ஷிப் தொடருடன் ஒப்பிடக் கூடாது. அதிலிருந்து மாறுபட்ட போட்டி இது. ஆனால் இதனை ‘இனிமையான பழிவாங்கல்’ என்று எடுத்துக் கொள்ளலாம். உலக சாம்பியன்ஷிப் தொடர் குறித்து நான் நினைக்கவில்லை. இருவரும் பொறுமையாக விளையாடினோம். இந்த முறை ஆட்டத்தை சாதகமாக்கி நான் வெற்றி பெற்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து அண்மையில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் தொடரில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவிடம் தோல்விகண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg