Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நேபாளத்தில் தப்பிப் பிழைத்த பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கதை

In
Published: 11:20 GMT, Sep 20, 2017 |
0 Comments
1464
icon_com
This post was written by : elayathambi

நேபாளத்திற்குச் சென்ற பிரித்தானிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் தன்னை நேபாளிய பெண் ஒருவர் அடிக்கத் துரத்திய  சோகக் கதையை,  சமூக வலைத் தளங்களிலும் பிரித்தானிய ஊடகங்களிலும்  பதிவு செய்துள்ளார்.  இந்த நிகழ்வை தானே பதிவு செய்த காணொளியையும் அவர் வெளியிட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்,

மலையேற்றத்திற்காக அதிக சுற்றுலாப் பயணிகள் செல்லும் நேபாளத்தின் அன்னபூர்ணா மலைப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு தேனீருக்காக விலையை வழக்கத்தை விட அதிகமாகக் கேட்ட தேனீர்க் கடைக்காரியுடன் ஏற்பட்ட தகராற்றினால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தப்பி ஓடவும் கெஞ்சவும் வழி வைத்திருக்கிறது.

31 வயதான சுற்றுலாப் பயணியான ஜெம்மா வில்சனிடம், வழக்கத்தை விட மிக அதிகமான விலையை தருமாறு தேனீர்க் கடை உரிமையாளரான பெண் கேட்டுள்ளார். இது நியாயமில்லை என ஜெம்மா வில்சன் முதலில் வாதிட்டிருக்கிறார். இறுதியில் கடைக்காரி கேட்ட தொகையையே கையளித்துள்ளார். காசைக் கொடுத்துவிட்டு கடையை விட்டு வெளியேறிய அவர் குறித்த கடையின் பெயர்ப் பலகையை புகைப்படம் எடுக்க முனைந்தபோதே பிரச்சனை புது வடிவத்தை எட்டி இருக்கிறது.

கடையைப் புகைப்படம் எடுப்பதை அவதானித்துக் கோபப்பட்ட  தேனீர்க் கடைக்காரி, ஜெம்மா வில்சனை தடியோடு மலைப்பாதையில்  துரத்தியிருக்கிறார். மலைப் பாதையில் அதிக தூரம் தப்பி ஓட முடியாத நிலையில் கடைசியாக கெஞ்சிக் கூத்தாடித் தப்பித்துள்ளார்.

பிரித்தானிய சுற்றுலாப் பயணியை துரத்திய நேபாளிப் பெண்ணை பைத்தியக்காரி என்றும்  நாகரீகமற்றவள் எனவும் பிரித்தானிய ஊடகங்கள் சொல்லி இருக்கின்றன. உடைந்த ஆங்கிலத்தில் பிரித்தானியர்களையும் வெள்ளை இனத்தையும் அசிங்கமாக திட்டும் ஒரு பெண்ணை மேலைத்தேய ஊடகங்கள் வேறெப்படித்தான் விமர்சிக்குமாம்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg