Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவை சுனாமி தாக்கும்! – எச்சரிக்கை கடிதத்தால் பீதி

In இந்தியா
Published: 04:24 GMT, Sep 27, 2017 |
0 Comments
1337
This post was written by : Risha
Tsunami

இவ்வாண்டு இறுதிக்குள் இந்தியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கை கடிதத்தினால் மக்கள் மத்தியில் பெரும் பீதி கிளம்பியுள்ளது.

ஆனால், நிலநடுக்கத்தை எவராலும் முன்கூட்டியே அறிவிக்க முடியாது எனத் தெரிவித்த புவியியலாளர்கள், ஆதாரமற்ற தகவல்களை நம்பி அச்சமடையத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இந்தியாவை மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக கேரளாவை சேர்ந்த ஆய்வகமொன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து புவியியல் துறை சார்ந்தவர்கள் கூறுகையில், பூமியில் உள்ள நிலத்தட்டுகள் மோதிக் கொள்வதினாலேயே நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்தியாவில் தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் நிலதட்டுகளின் எல்லையில் அமைந்திருப்பதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனக் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg