Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏமாற்றத்திற்குள்ளான ஷரபோவா உருக்கமான பேச்சு!

In டெனிஸ்
Published: 12:11 GMT, Oct 5, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Anojkiyan
mari

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ரோமேனியாவின் நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹெலெப்பிடம் தோல்விகண்டது குறித்து ரஷ்ய வீராங்கனையான மரிய ஷரபோவா உருக்கமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஹெலெப் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடினார். பந்தை வலுவாக திருப்புவதில் சீரான விளையாட்டை வெளிப்படுத்திய அவர் அதிகமாக தவறுகள் செய்யவில்லை. அவரது சர்வீசும் அபாரமாக இருந்தது. அதே சமயம் எனது விளையாட்டில் துல்லியம் இல்லை” என கூறினார்.

நேற்று (புதன்கிழமை) பீஜிங் நகரில் நடைபெற்ற பெண்கள்களுக்கான 3வது சுற்று போட்டியில், ஷரபோவா 2-6,2-6 நேர் செட்டில் சிமோனா ஹெலெப்பிடம் அதிர்ச்சி தோல்விடைந்தார்.

30 வயதான ஷரபோவா, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாதங்கள் தடையை அனுபவித்து விட்டு கடந்த ஏப்ரல் மாதம் மறுபிரவேசம் செய்தார். அதன் பிறகு சற்று தடுமாறும் ஷரபோவாவுக்கு இந்த தோல்வி பலத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg