Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செல்லூர் ராஜு மனச்சாட்சியுடையவர் – தினகரன்

In இந்தியா
Updated: 10:41 GMT, Oct 9, 2017 | Published: 10:41 GMT, Oct 9, 2017 |
0 Comments
1208
This post was written by : Kemasiya

“அமைச்சர் செல்லூர் ராஜு மனச்சாட்சியுடையவர். அவர் மதுரைக்காரன் என்பதால் தான் நன்றியுடனும், மனச்சாட்சியுடனும் செயற்படுகின்றார்” என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சசிகலா பரோலில் வந்துள்ள நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு “சசிகலா அ.தி.மு.க. கட்சிக்காக பெரும் பாடுபட்டவர்” என கருத்து வெளியிட்டுள்ளார். இந்த கருத்தை வரவேற்கும் முகமாக தினகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன் போது தினகரன் மேலும் தெரிவிக்கையில்,

“எடப்பாடி அரசு எனது குரல் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதற்கு நான் ஒத்து போக மாட்டேன். அவர்கள் ஒட்டுக்கேட்டது என்னுடைய குரல் அல்ல. ஒட்டுக் கேட்ட தொலைபேசி குரல் சோதனைக்கு நான் உடன் போக மாட்டேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg